மோட்டார்சைக்கிளில் கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு சென்ற வாலிபர் கைது


மோட்டார்சைக்கிளில் கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு சென்ற வாலிபர் கைது
x

கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு சென்ற வாலிபர் கைது

ஈரோடு

கோபி அருகே உள்ள கொடிவேரி அணை பிரிவு வளைவு பகுதியில் கடத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மோகனன், மதுவிலக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் சந்தேகப்படும் வகையில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவரிடம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 'அவர் கோபி அருகே உள்ள ஒட்டர்பாளையத்தை சேர்ந்த மோகன்குமார் (வயது 22) என்பதும், அவர் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை கொண்டு சென்றதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மோகன்குமாரை கடத்தூர் போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்


Next Story