பணம், செல்போனை கேட்டு பீர் பாட்டிலால் வாலிபர் மீது தாக்குதல்
பள்ளிகொண்டா அருகே பணம், செல்போனை கேட்டு பீர் பாட்டிலால் வாலிபர் மீது தாக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் தன்வீர் (வயது 28). இவர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மது அருந்திக் கொண்டிருந்தவர்களிடத்தில் பணம் கேட்டு செல்போனை பறித்துள்ளனர். தன்வீரஅவர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த வழிப்பறி கொள்ளையர்கள் அங்கிருந்த பீர்பாட்டிலால் தன்வீர் தலை மீது தாக்கினர். இதில் காயமடைந்த தன்வீர் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த கும்பல் விரிஞ்சிபுரம் பகுதியிலும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களிடத்தில் செல்போனை பறித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.