மது பாட்டிலால் வாலிபரை தாக்கி செல்போன், பணம் பறிப்பு


மது பாட்டிலால் வாலிபரை தாக்கி செல்போன், பணம் பறிப்பு
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே மதுபாட்டிலால் வாலிபரை தாக்கி செல்போன், பணத்தை பறித்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தேனி

தேனி அருகே பூதிப்புரத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 35). இவர் பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு ஆயத்த ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவர் தனது குழந்தைக்கு பால் வாங்குவதற்காக வீட்டில் இருந்து கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பூதிப்புரம் தென்னை மர பஸ் நிறுத்தத்தில் 4 பேர் சாலையில் நின்றனர். அவர்கள் விலகிச் செல்வதற்காக பிரபு தனது வண்டியில் ஹாரன் அடித்தார். இதனால், அவர்கள் பிரபுவிடம் தகராறு செய்து, மது பாட்டிலால் அவரை தாக்கினர். இதில் அவர் காயம் அடைந்தார். மேலும் அவர்கள் பிரபுவிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.3 ஆயிரத்தை பறித்துக் கொண்டனர். பின்னர் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் பழனிசெட்டிபட்டி போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில், வீருசின்னம்மாள்புரத்தை சேர்ந்த ஆண்டவர் மகன்கள் ராஜ்குமார், வனராஜ், பூதிப்புரத்தை சேர்ந்த நாகபாண்டி, ராம்குமார் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.


Next Story