பெருந்துறை அருகே லாரி மோதி வாலிபர் பலி
பெருந்துறை அருகே லாரி மோதி வாலிபர் பலி
பெருந்துறை
பெருந்துறை சிப்காட் அருகே உள்ள செங்குளம் என்ற ஊரைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருடைய மகன் வினோத் குமார் (வயது 34). சரக்கு லாரி போக்குவரத்து அலுவலகம் வைத்து நடத்தி வந்தார். இவர் கடந்த 31-ந் தேதி இரவு தனது மோட்டார்சைக்கிளில் கோவை ரோட்டில் சிப்காட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். மடத்துப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக பக்கவாட்டில் வந்த லாரி மீது, வினோத்குமாரின் மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக வினோத்குமார் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வினோத்குமார் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் மன்சூர் அலி என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.