மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
தென்காசி
ஆலங்குளம்:
தென்காசி மங்கம்மாள் சாலையைச் சேர்ந்த தேவராஜ் மகன் குணசீலன் (வயது 18). அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ராஜேஷ். சம்பவத்தன்று இவா்கள் 2 பேரும் தென்காசியில் இருந்து ரதமுடையார்குளம் பகுதியில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
கரையாளனூர் கிராமம் அருகே உள்ள ஒரு வளைவில் திரும்பும்போது, மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அங்குள்ள வயலில் பாய்ந்தது. இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குணசீலன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story