மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் வாலிபர் பலி
நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் பழையபேட்டை பகுதியை சேர்ந்தவர் சேர்ந்த மகேந்திரன் மகன் கோபி (வயது 25). இவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். கோபி கடந்த 3 மாதத்திற்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பினார். இந்த நிலையில் கோபி தனது மோட்டார் சைக்கிளிலில் பச்சூர் பகுதியில் இருந்து டோல்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பச்சூர் ரெயில்வே கேட் அருகே சென்றபோது எதிரே வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கோபியை அங்கிருந்த பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோபி இறந்து விட்டார்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய நாட்டறம்பள்ளி அருகே மல்லகுண்டா பகுதியைச் சேர்ந்த மினி லாரி டிரைவர் சுரேஷ் (40) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.