நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது


நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேவாலா அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா நாடுகாணி, மரப்பாலம், இரும்பு பாலம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது இரும்பு பாலம் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தார். அப்போது அவர் நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தேவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கூடலூர் கோழிபாலம் பகுதியை சேர்ந்த மோதிலால் (வயது 24) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, வனவிலங்கு வேட்டை கும்பல் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை வாலிபர் எடுத்து வந்துள்ளார். அதை பயன்படுத்த தெரியாமல் வீட்டில் இருந்து வெளியே எடுத்து வந்த போது, போலீசாரிடம் சிக்கிக்கொண்டார் என்றனர்.


Next Story