பாம்பை காப்பாற்ற முயன்று தாயை இழந்த வாலிபர்- இருசக்கர வாகனத்தில் திடீர் பிரேக் பிடித்ததால் விபரீதம்
பாம்பை காப்பாற்ற முயன்று தாயை இழந்த வாலிபர்- இருசக்கர வாகனத்தில் திடீர் பிரேக் பிடித்ததால் விபரீதம்
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருேக உள்ள குராயூரைச் சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மனைவி செல்வராணி (வயது50). இவர்களுடைய மகன் பாலமுருகன் (30).
தாயும், மகனும் இருசக்கர வாகனத்தில் கள்ளிக்குடிக்கு சென்று காய்கறிகள் வாங்கிவிட்டு, மீண்டும் குராயூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை மகன் ஓட்ட, பின்னால் செல்வராணி அமர்ந்திருந்தார்.
சென்னம்பட்டி பகுதியில் வந்தபோது, திடீரென சாலையின் குறுக்கே பாம்பு ஊர்ந்து சென்றது. பாம்பு மேல் இருசக்கர வாகனம் ஏறிவிடாமல் இருக்க திடீர் பிரேக் பிடித்து வாகனத்தை பாலமுருகன் நிறுத்த முயன்றார். அதற்குள் பாம்பு சென்றுவிட்டது.
ஆனால், நிலை தடுமாறி செல்வராணி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய அவரை கள்ளிக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்தபோது, செல்வராணி இறந்துவிட்டது தெரியவந்தது. இந்த விபரீத சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பாம்பை காப்பாற்ற நடந்த முயற்சியில், வாலிபர் தனது தாயை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.