காதலியிடம் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த வாலிபர் கைது
கீழ்பென்னாத்தூர் அருகே காதலியிடம் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
கீழ்பென்னாத்தூர் அருகே காதலியிடம் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
காதலியிடம் உல்லாசம்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த பூதமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 30). இவர், 23 வயதுடைய பட்டதாரி இளம் பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்து உள்ளார். அப்போது அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏழுமலைக்கு வேெறாரு பெண்ணுடன் திருமணம் செய்வதற்காக ஏற்பாடு நடந்து உள்ளது.
இதுபற்றி அறிந்ததும் இளம்பெண், ஏழுமலையை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு ஏழுமலை உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். மேலும் ஏழுமலையின் உறவினர்களும் கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.
காதலன் கைது; 3 போ் மீது வழக்கு
அப்படி திருமணம் செய்ய வேண்டும் என்றால் நகை, பணம் எடுத்து வந்தால் தான் திருமணம் செய்ய முடியும் என்று தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். மேலும் ஏழுமலையின் உறவினர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.