சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை


சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
x

சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜன் பணியில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வெங்கடேஷ் (வயது 26) என்பவரை நிறுத்தி விசாரித்த போது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சப்-இன்ஸ்பெக்டரை வெங்கடேஷ் குத்தினார்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசில் தர்மராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பிரீத்தா விசாரித்து போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய வெங்கடேசுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Related Tags :
Next Story