மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் சிக்கினார்


தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள மேல தட்டப்பாறை உமரிக்கோட்டை ரோட்டை சேர்ந்தவர் சிவன். இவருடைய மகன் சுடலைமணி (வயது 40). இவர் கடந்த 16-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்த போது, மா்மநபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

இது குறித்து சுடலைமணி அளித்த புகாரின் பேரில் தட்டப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி கீழ செக்காரக்குடியை சேர்ந்த ஆறுமுக நயினார் மகன் நெல்லையப்பன் (22) மோட்டார் சைக்கிளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தட்டப்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், மோட்டார் சைக்கிள் திருடிய நெல்லையப்பனை கைது செய்தார். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் அவர் பறிமுதல் செய்தார்.


Next Story