பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது


பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
x

ஆம்பூர் அருகே பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

மாதனூர் பஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு, தொலைபேசியில் புகார் வந்தது.

இதனையடுத்து ஆம்பூர் தாலுகா போலீசார் மாதனூர் பஸ் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை சேர்ந்த விஜயகுமார் (வயது 37) என்பது தெரிந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story