போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
வந்தவாசி அருகே போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பொன்னூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் வந்தவாசி-சேத்பட்டு சாலையில், கீழ்சாத்தமங்கலம் புறவழிச்சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கயநல்லூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் வயது 34 என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்ததாகவும், மேலும் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story