வீடுபுகுந்து திருட முயன்ற வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்
ஜோலார்பேட்டை அருகே வீடுபுகுந்து திருட முயன்ற வாலிபரை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாலைநகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சாந்தலட்சுமி (வயது 37). அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கணேசனின் வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து வீட்டின் வராண்டாவில் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம, மணி பர்ஸ் ஆகியவற்றை திருட முயன்றுள்ளார்.
இதை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அவரை கையும் களவுமாக பிடித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர் ஜோலார்பேட்டையை அடுத்த பால்னாங்குப்பம் கங்காநகர் பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பவரது மகன் ராஜேஷ் (37) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் சேதுக்கரசன் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்தார்.
Related Tags :
Next Story