திட்டக்குடியில்மினிலாரியை திருட முயன்ற வாலிபர் கைது


திட்டக்குடியில்மினிலாரியை திருட முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Sept 2023 12:15 AM IST (Updated: 25 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடியில் மினிலாரியை திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

கடலூர்


திட்டக்குடி,

திட்டக்குடி கோழியூரில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் உரிமையாளருக்கு சொந்தமான மினிலாரி ஒன்று அங்கு நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், வாலிபர் ஒருவர், அந்த மினிலாரியை திருட முயற்சித்தார். அப்போது, அங்குள்ள கம்பி வேலியில் மோதி விபத்தில் சிக்கியது. இதையடுத்து, அங்கேயே மினிலாரியை விட்டுவிட்டு, அந்த வாலிபர் தப்பி சென்றுவிட்டார்.

நேற்று மதியம் கடையின் உரிமையாளர் கார்த்திக் அங்கு வந்தார். அப்போது, மினிலாாி கம்பிவேலியில் மோதி நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது, ஒருவர் மினிலாரியை திருட முயற்சித்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் திட்டக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கருவேப்பிலங்குறிச்சி அடுத்துள்ள கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து விக்னேசை போலீசார் கைது செய்தனர்.


Next Story