குடிபோதையில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்ம அடி


குடிபோதையில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்ம அடி
x

குடிபோதையில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது.

வேலூர்

வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த அமிர்தியில் சிறுவன உயிரியின பூங்கா அமைந்துள்ளது. இந்த பகுதியில், சில இளைஞர்கள் மது, கஞ்சா போதையில் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சி செய்வது, செயின் பறிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அமிர்திக்கு வந்த தம்பதியிடம் குடிபோதையில் இருந்த இளைஞர் ஒருவர், பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர். பின்னர் அந்தப் பெண், அந்த வாலிபரை செருப்பால் அடித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூறப்படுகிறது.


Next Story