ஈரோட்டில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


ஈரோட்டில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
x

ஈரோட்டில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

ஈரோடு

ஈரோடு மாநகர் பகுதியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 9 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இதில் ஈரோடு வீரப்பன்சத்திரம் காமராஜர் வீதியை சேர்ந்த வேட்டை ரவி என்கிற ரவிச்சந்திரன் (வயது 26), கோபியில் உள்ள ஈரோடு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர் இதுகுறித்து ஈரோடு கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை ஏற்ற கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேற்று வேட்டை ரவியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில், கருங்கல்பாளையம் போலீசார், வேட்டை ரவியை நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


Related Tags :
Next Story