ரூ.2 லட்சத்தில் பொதுமக்கள் கட்டிய தற்காலிக தரைப்பாலம்


ரூ.2 லட்சத்தில் பொதுமக்கள் கட்டிய தற்காலிக தரைப்பாலம்
x

ரூ.2 லட்சத்தில் பொதுமக்கள் கட்டிய தற்காலிக தரைப்பாலம்

தஞ்சாவூர்

கரம்பயம்

மாளியக்காடு ஊராட்சி மகாராஜா சமுத்திரம் காட்டாற்றில் ரூ.2 லட்சம் செலவில் பொதுமக்கள் தற்காலிக தரைப்பாலம் கட்டி உள்ளனர்.

காட்டாறு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாளியக்காடு கிராமத்தில் மகாராஜாசமுத்திரம் காட்டாற்றில் ரூ.2 லட்சம் செலவில் கிராம மக்களாக முன்வந்து தற்காலிக தரைப்பாலம் அமைத்துள்ளனர். மாளியக்காடு ஊராட்சியில் மகாராஜாசமுத்திரம் காட்டாறு உள்ளது. மாளியக்காடு, சேண்டாக்கோட்டை, பள்ளிகொண்டான், தொக்காளிக்காடு, மழவேனிற்காடு, புதுக்கோட்டை உள்ளூர் உள்ளிட்ட கிராம மக்கள் இந்த காட்டாற்றை கடந்து தான் அக்காரவயல், கார்காவயல், கோட்டாகுடி, பள்ளத்தூர், உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல முடியும்.

தரைப்பாலம்

குறிப்பாக விவசாயம் செய்து அறுவடை செய்த பொருட்களை கொண்டு வருவதற்கும், ஆடு மாடுகளை மேய்த்து விட்டு அவைகளை தினசரி அழைத்து வருவதற்கும் காட்டாற்று தண்ணீருக்குள் தான் நடந்து வர வேண்டிய நிலை உள்ளது. தண்ணீர் குறைவாக சென்றால் மட்டுமே ஆற்றை கடந்து செல்ல முடியும்.

காட்டாற்றில் தண்ணீர் அதிகமாக சென்றால் ஆற்றை கடந்து மறு பகுதிக்கு செல்ல முடியாது. எனவே மகாராஜாசமுத்திரம் காட்டாற்றில் 154 மீட்டர் தூரத்துக்கு சுமார் ரூ.2 லட்சம் செலவில் சேண்டாக்கோட்டை, மாளியக்காடு, காசாங்காடு ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த செலவில் தற்காலிக தரைப்பாலம் அமைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துைற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விரைவில் நிரந்தர பாலம் கட்டித்தர வேண்டும் என்று மாளியக்காடு ஊராட்சி தலைவர் ரமேஷ் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story