லாட்ஜில் ஜவுளி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை


லாட்ஜில் ஜவுளி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டையில் லாட்ஜில் ஜவுளி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்தார்

தென்காசி

சுரண்டை:

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே கடையநல்லூர் மாவடிகால் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா என்பவர் மகன் காளிமதி (வயது 34). ஜவுளி வியாபாரி. இவர் சுரண்டையில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை இவர் தங்கியிருந்த அறை கதவு வெகு நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் சுரண்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தனர். அப்போது காளிமதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனடியாக அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், காளிமதி கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்கான சிகிச்சை எடுத்தும் சரியாகாததால் விஷம் குடித்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து அவரது அண்ணன் அருண்மதி அளித்த புகாரின் பேரில் சுரண்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story