அரவைக்காக ஆயிரம் டன் நெல்
மயிலாடுதுறையில் இருந்து தென்காசிக்கு அரவைக்காக ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 96 ஆயிரம் ஏக்கரில் குறுவை அறுவடை பணிகள் நிறைவடைந்தது. தற்போது தாளடி மற்றும் சம்பா நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. அறுவடையான நெல்லை விவசாயிகள் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை அரவைக்காக அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டு வந்த நிலையில் நேற்று ஆயிரம் டன் நெல்மூட்டைகளை மயிலாடுதுறையிலிருந்து சரக்கு ெரயில்மூலம் அரவைக்காக தென்காசி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கும் பணி நடந்தது. அரசு நேரடி கொள்முதல் நிலையங்களிலிருந்து 100 லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்ட நெல்மூட்டைகளை மயிலாடுதுறை ெரயில் நிலையத்திலிருந்து சரக்கு ெரயிலில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் ஏற்றப்பட்டது. பின்னர் சரக்கு ரெயிலில் நெல்மூட்டைகள் அரவைக்காக தென்காசிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.