பசுமாடுகளை கொன்ற புலி கூண்டில் சிக்கியது


பசுமாடுகளை கொன்ற புலி கூண்டில் சிக்கியது
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழக-கேரள எல்லையில் பசுமாடுகளை கொன்ற புலி கூண்டில் சிக்கியது. இதனால் ெபாதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

நீலகிரி

பந்தலூர்,

தமிழக-கேரள எல்லையில் பசுமாடுகளை கொன்ற புலி கூண்டில் சிக்கியது. இதனால் ெபாதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கலெக்டர் பேச்சுவார்த்தை

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பாட்டவயல் அருகே தமிழக-கேரள எல்லையில் நூல்புழா பகுதி உள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாட்டவயலில் இருந்து சுல்தான்பத்தேரிக்கு செல்லும் சாலையோரத்தில் புலி நடமாடியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். மேலும் பசுமாடுகளை கடித்து கொன்றது. அப்பகுதி முதுமலை புலிகள் காப்பகம், முத்தங்கா மற்றும் பந்திப்பூர் சரணாலயங்கள் இணையும் இடமாக உள்ளது.

தொடர்ந்து கால்நடைகளை புலி வேட்டையாடி வந்ததால், புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வயநாடு மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த மாவட்ட கலெக்டர் கீதா தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் முத்தங்கா சரணாலய இயக்குனர் ஹப்துல் ஹசீஸ் தலைமையில் வனத்துறை ஊழியர்கள், அதிவிரைவு படை வீரர்கள் 16 பேர், கால்நடை டாக்டர் அருண் சக்காரியா மற்றும் மருத்துவ குழுவினர் வனப்பகுதியில் புலி பதுங்கி உள்ளதா என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

புலி சிக்கியது

இதையடுத்து பிதிர்காடு வனச்சரகர் ரவி மற்றும் வனத்துறையினர் எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நூல்புழா பகுதியில் 3 பசுமாடுகளை புலி தாக்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இறந்த பசுமாடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரி சீராலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இந்தநிலையில் முத்தங்கா வனத்துறையினர் நூல்புழா பகுதியில் நடமாடும் புலியை பிடிக்க கூண்டு வைத்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அப்பகுதியில் நடமாடிய புலி கூண்டில் சிக்கியது.

இதனை வனத்துறையினர் உறுதி செய்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து பிடிபட்ட புலியை கூண்டோடு ஏற்றி, வாகனத்தில் முத்தங்கா சரணாலயத்திற்கு கொண்டு சென்றனர். அட்டகாசம் செய்த புலி கூண்டில் சிக்கியதால், வயநாடு மற்றும் பந்தலூர் பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


Next Story