வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டரில் தீப்பிடித்தது
அம்பை அருகே வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டரில் திடீரென்று தீப்பிடித்தது
திருநெல்வேலி
அம்பை:
அம்பை பகுதியில் இருந்து டிராக்டர் ஒன்றில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு ஆலங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. கோவில்குளம் பஸ் நிறுத்தம் அருகில் வந்தபோது, மின்கம்பியில் வைக்கோல் கட்டுகள் உரசியதால் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து அம்பை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் வெட்டும்பெருமாள், நிலைய அலுவலர் பலவேசம் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, டிராக்டரில் இருந்து வைக்கோல் கட்டுகளை கீழே இறக்கி சாலையில் போட்டு தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். டிராக்டர் பத்திரமாக மீட்கப்பட்டது. இந்த தீவிபத்து குறித்து அம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story