சாலையில் கவிழ்ந்த டிராக்டர் டிப்பர்


சாலையில் கவிழ்ந்த டிராக்டர் டிப்பர்
x

சாலையில் டிராக்டர் டிப்பர் கவிழ்ந்தது.

திருச்சி

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரத்தை அடுத்த புடலாத்தியில் இருந்து உப்பிலியபுரம் நோக்கி டிரைவர் கண்ணன்(வயது 28) என்பவர் ஒரு டிராக்டரை ஓட்டி வந்தார். வெங்கடாசலபுரம் தீயணைப்பு நிலையம் அருகே வந்தபோது டிராக்டரின் முன்பகுதியில் இருந்த பம்பர் பகுதி உடைந்து விழுந்து சாலையில் குத்தி நின்றதால், டிராக்டரின் பின்பகுதியில் இணைக்கப்பட்டிருந்த டிப்பர் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர் கண்ணன் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டது. மேலும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story