போளூர் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி வியாபாரி பலி
போளூர் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி வியாபாரி உயிரிழந்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த கேளூரை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 40), வியாபாரி. இவர், இருசக்கர வாகனத்தில் போளூரை அடுத்த பொத்தரை கிராமத்திற்கு வந்தார். பின்னர் மனைவி கங்காவின் சகோதரி சாரதியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போளூருக்கு சென்றார்.
நைனாவரம் கிராமம் அருகே சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரை அசோக்குமார் முந்தி சென்ற போது, டிராக்டரின் பின் சக்கரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் சென்ற சாரதி சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார். இதற்கிடையில் டிராக்டர் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமச்சந்திரன். சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story