சிதம்பரம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை தந்தை கண்டித்ததால் விபரீத முடிவு


சிதம்பரம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை தந்தை கண்டித்ததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே தந்தை கண்டித்ததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

அண்ணாமலை நகர்,

சிதம்பரம் அருகே உள்ள கீழக்குண்டலப்பாடி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் நல்லான் மகன் வினோத் (வயது 22). இவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவருடைய தந்தை நல்லான் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த வினோத் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று காலை வினோத் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story