அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு


அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு
x

வந்தவாசியில் அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் ஆசிரியர் மேம்பாடு நிறுவனம் சார்பில் சிக்கல்களுக்கு தீர்வு காணும் திறன் என்ற தலைப்பில் கல்லூரி பேராசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.

கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக இயக்குனர் எம்.ரமணன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சி.ருக்மணி வரவேற்றார்.

சென்னை ஐ.சி.டி. அகாடமியின் முதுநிலை மேலாளர் கே.நிர்மல்குமார் மற்றும் மென்திறன் பயிற்சியாளர் இருஆதில் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கல்லூரி பேராசிரியர்களுக்கு பகுப்பாய்வுத்திறன், சிக்கல்களுக்கு புதிய தீர்வு, அதனை செயல்படுத்தும் திறன் என பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.

இதில் சுமார் 40 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பயிற்சியில் கலந்து கொண்ட பேராசிரியர்களுக்கு சான்றிழ்கள் வழங்கப்பட்டது.

முடிவில் கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் கி.வான்மதிசெல்வி நன்றி கூறினார்.


Related Tags :
Next Story