வீட்டின் மீது மரம் விழுந்தது


வீட்டின் மீது மரம் விழுந்தது
x

குன்னூர் அருகே வீட்டின் மீது மரம் விழுந்தது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே சாலையில் மரம் விழுந்து, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குன்னூர் அருகே மலையப்பன் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரம் ஒன்று முறிந்து மின்கம்பம் மீது விழுந்தது. மேலும் மரக்கிளைகள் அருகே இருந்த வீட்டின் மீது விழுந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் பொதுமக்கள் உதவியுடன், சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றினர். பின்னர் மின்கம்பம் சீரமைக்கப்பட்டு, மின்வினியோகம் வழங்கப்பட்டது.


Next Story