வீட்டின் மீது மரம் விழுந்தது.
அரக்கோணம் அருகே வீட்டின் மீது மரம் விழுந்தது.
அரக்கோணம்
அரக்கோணம் அருகே வீட்டின் மீது மரம் விழுந்தது.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழை தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெய்து வருகிறது. அதன்படி அரக்கோணம் அடுத்த அரிகிலபாடி கிராமத்தில் ரமேஷ் என்பவரது வீடு அரக்கோணம் - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் உள்ளது. நேற்று மழையின்போது புளிய மரம் ஒன்று அவரது வீட்டின் மீது விழுந்தது.
ரமேஷ் மற்றும் குடும்பத்தினர் வீட்டின் அருகில் உள்ள தந்தை வீட்டில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக யாருக்குப் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. சேதம் அடைந்த வீட்டினை அரக்கோணம் தாசில்தார் சண்முக சுந்தரம் பார்வையிட்டார்.
மழையால் தணிகைபோளூர் பெரிய ஏரி நிரம்பி கடவாசல் வழியாக உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள வாலிபர்கள் கடவாசலில் மீன்களை பிடித்து வருகின்றனர். அரக்கோணம் - திருத்தணி நெடுஞ்சாலையில் மேம்பாலம் அருகே உள்ள செந்தில் நகரில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அரக்கோணம் அடுத்த முருங்கை கிராமத்தில் உள்ள விருதசீர ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக அங்கு பொதுமக்கள் செல்வதை தடுக்க தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.
மழையால் அதிக அளவிலான நிலங்கள் தண்ணீரில் மூழ்கி பயிர்கள் பாதிக்கப்பட்டன. அவற்றை தாசில்தார் சண்முகசுந்தரம் பார்வையிட்டார்.
அப்போது வருவாய் ஆய்வாளர் பிள்ளையார், கிராம நிர்வாக அலுவலர்கள் நெடுஞ்செழியன், கலைவாணன், முருங்கை தலைவர் சசிகுமார் ஆகியோர் உடன் இருந்தார்.