மேல் விஷாரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை வீட்டின் மீது மரம் விழுந்தது

மேல் விஷாரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை வீட்டின் மீது மரம் விழுந்தது
x

மேல்விஷாரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் வீட்டின் மீது மரம் விழுந்ததால் வீட்டில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

ராணிப்பேட்டை

ஆற்காடு

மேல்விஷாரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் வீட்டின் மீது மரம் விழுந்ததால் வீட்டில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

சூறாவளி காற்றுடன் மழை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, மேல்விஷாரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் பலத்த பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் கழிவு நீருடன் கலந்து ஆறாக ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் மற்றும் கழிவு நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான ஹனீப்சாஹிப் தெரு மேட்டுப் பகுதியில் அமைந்துள்ள புதுப்பேட்டை 3-வது தெருவில் தொடர்ந்து காற்று வீசியதால் மரம் ஒன்று கூரை வீட்டின் மேல் விழுந்தது. இதில் வீட்டில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

பத்திரமாக மீட்பு

இதுகுறித்து தகவலறிந்த மேல்விஷாரம் நகரமன்ற தலைவர் எஸ். டி.முஹம்மத் அமீன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் சென்று மீட்புப் பணிகளை முடக்கி விட்டனர். வீட்டுக்குள் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Next Story