ரோட்டில் மரம் முறிந்து விழுந்தது
ரோட்டில் மரம் முறிந்து விழுந்தது.
ஈரோடு
தாளவாடி
தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. மேலும் அவ்வபோது சாரல் மழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் ரோட்டில் நெய்தாளபுரம் அருகே சாலையோரத்தில் மூங்கில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக ெசன்ற வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். இதுபற்றி அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரோட்டில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது. 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
Related Tags :
Next Story