காய்த்து குலுங்கும் திருவோடு மரம்


காய்த்து குலுங்கும் திருவோடு மரம்
x

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் காய்த்து குலுங்கும் திருவோடு மரத்தை ஆர்வத்துடன் பக்தர்கள் பார்த்து செல்கிறார்கள்.

திருநெல்வேலி

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் வளாகத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜி.டி.முருகேசன் திருவோடு மரக்கன்றை நட்டுள்ளார். இந்த வகை மரங்கள் குளிர்ச்சியான பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. அட்சய பாத்திரம் என்று அழைக்கப்படும் திருவோடு, சிவபெருமானுக்கு உகந்தது என்பதால் சிவ ஆலயமான சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வளர்த்து வருவதாக கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் கூறினார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் காய்த்து குலுங்கும் திருவோடு மரத்தை ஆர்வத்துடன் பார்த்து அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.


Next Story