தேவநேய பாவாணர் உருவப் படத்துக்கு மரியாதை
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேவநேய பாவாணர் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மொழிஞாயிறு தேவநேய பாவாணரின் 121-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாளையங்கோட்டை மகாராஜநகரில் அலங்கரித்து வைக்கப்பட்ட தேவநேய பாவாணரின் உருவப்படத்துக்கு த.ம.மு.க. மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநகர இளைஞரணி செயலாளர் சிவந்தி முத்துப்பாண்டி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார், த.ம.மு.க. நிர்வாகிகள் பரமசிவபாண்டியன், மேலப்பாளையம் பகுதி இனைசெயலாளர் முருகேஷ், சிவந்திபட்டி ஊராட்சி இளைஞர்அணி செயலாளர் முத்துவளவன், தச்சநல்லூர் பகுதி செயலாளர் செல்வகுமரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது, நெல்லையில் உள்ள மாவட்ட மைய நூலகத்துக்கு தேவநேய பாவாணரின் பெயர் சூட்ட வேண்டும். பாளையங்கோட்டை அரசு சித்தா ஆஸ்பத்திரி எதிரில் முழு உருவ வெண்கல சிலை நிறுவ வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.