மீன்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து


மீன்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
x

ஆம்பூர் அருகே மீன்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருப்பத்தூர்

சென்னையில் இருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கிருஷ்ணகிரி பகுதிக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த மீன்கள் சாலையில் சிதறியது. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் சிறுகாயங்களுடன் உயிர்த்தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து செனஅறு லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story