மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் பலி


மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் பலி
x

ஆற்காடு அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் பலியானார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு

ஆற்காடு அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் பலியானார்.

ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). ராணிப்பேட்டை காரைப்பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் குமார் (58). இருவரும் நேற்று மதியம் வேலூர் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை செந்தில் குமார் ஓட்டி வந்துள்ளார். மேல்விஷாரம் தனியார் மருத்துவமனை அருகே வரும்போது இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த லாரி மோதியது.

இதில் தேவராஜ்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். செந்தில் குமார் படுகாயமடைந்து மேல்விஷாரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தேவராஜ்குமார் உடலை ஆற்காடு டவுன் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story