வீட்டின் மீது லாரி மோதியது


வீட்டின் மீது லாரி மோதியது
x
தினத்தந்தி 22 Nov 2022 6:45 PM GMT (Updated: 22 Nov 2022 6:47 PM GMT)

திருவட்டார் அருகே வீட்டின் மீது லாரி மோதியது

கன்னியாகுமரி

திருவட்டார்,

நாகர்கோவிலில் இருந்து பாறைப்பொடி ஏற்றிய ஒரு கனரக லாரி குலசேகரம் வழியாக மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திருவட்டார் அருகே புலியிறங்கியில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதி நின்றது. இதில் சுவர் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story