நடுரோட்டில் கவிழ்ந்த லாரியால் போக்குவரத்து பாதிப்பு


நடுரோட்டில் கவிழ்ந்த லாரியால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:18 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி

கூடலூர்,

கூடலூரில் நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நடுரோட்டில் கவிழ்ந்த லாரி

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்கள் மற்றும் மசினகுடி பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சரக்கு லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கோவையில் இருந்து கூடலூருக்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.

அதில் ஆன்லைன் வணிகம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான பொருட்கள் இருந்தது. அப்போது மேல்கூடலூர் பகுதியில் வந்த போது லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து சாலையோர தடுப்புச்சுவரில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. அதிகாலை நேரம் என்பதால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை. இதனிடையே சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் லாரிக்குள் சிக்கி இருந்த டிரைவரை மீட்டனர். கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கூடலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் லாரியை நடுரோட்டில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. இதை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. பின்னர் பல்வேறு கட்டமாக முயற்சி செய்து லாரி நிலை நிறுத்தப்பட்டது. இதனால் 1½ மணி நேரத்துக்கு பிறகு வாகன போக்குவரத்து தொடங்கியது. இந்த விபத்தால் கூடலூரில் இருந்து ஊட்டி, கோவை உள்பட பல்வேறு இடங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மிகவும் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதேபோல் ஊட்டி பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்களும் கேரளா-கர்நாடக மாநிலங்களுக்கு தாமதமாக சென்றது.


Next Story