குலசேகரம் அருகே சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கிய லாரி
குலசேகரம் அருகே சாலையில் உள்ள பள்ளத்தில் லாரி சிக்கியது.
கன்னியாகுமரி
குலசேகரம்,
குலசேகரம் அருகே சாலையில் உள்ள பள்ளத்தில் லாரி சிக்கியது.
லாரி சிக்கியது
குலசேகரம் அருகே உள்ள கோதையாறு அரசு ரப்பர் கழகத்தில் இருந்து ரப்பர் மரத்தடிகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கோதமடங்கு என்ற இடத்தில் வந்த போது சாலையில் இருந்த ஒரு பள்ளத்தில் சிக்கி நிலைதடுமாறி ஒரு பக்கமாக சாய்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் லாரியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அந்த பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து உள்ளதால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாகவும், எனவே, சாலைைய விரைவில் சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story