பயனற்ற மின் கம்பத்தை அகற்ற வேண்டும்
பயனற்ற மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை
அரக்கோணம்-திருத்தணி சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின் கம்பங்களை அகற்றி விட்டு சாலை ஓரமாக புதிய மின் கம்பங்கள் அமைத்தனர். இதில் நகராட்சி அலுவலகம் முன்பும், தாலுகா அலுவலக பஸ் நிறுத்தத்திலும் தரையில் கிடக்கும் பழைய மின் கம்பங்களை அப்படியே விட்டு சென்றதால் பஸ் நிறுத்தத்துக்கு வருபவர்களும், வயது முதிர்ந்தவர்களும் கால் இடறி கீழே விழும் அவலம் நடந்து வருகிறது. பயனற்ற மின் கம்பங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story