வைக்கோல் ஏற்றி வந்த வேனில் தீப்பிடித்தது
வைக்கோல் ஏற்றி வந்த வேனில் தீப்பிடித்து எரிந்தது.
மதுரை
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அருகே சால்வார்பட்டி பகுதியில் இருந்து ஆதனூர் வழியாக வேனில் வைக்கோல் ஏற்றி கொண்டு உசிலம்பட்டியை சேர்ந்த அழகப்பன் என்பவர் சென்றார். அப்போது மின்சார வயர் வைக்கோல் கட்டின் மீது உரசியது. இதில் தீ மளமளவென பற்றி எரிந்தது. வேனில் வந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, வாகனத்தை விட்டு கீழே இறங்கி ஓடினர். பின்னர் அலங்காநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் (பொறுப்பு) பொன்.மணி உள்ளிட்ட பணியாளர்கள் சென்று தீயை விரைந்து அணைத்தனர். வைக்கோல் முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும் வேனும் தீயில் கருகி சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story