மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலி
வந்தவாசி அருகே மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
வந்தவாசி
சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முத்துலிங்கம் மகன் விஷ்வா (வயது 22),
இவரும், நண்பர் அபினேஷ் (23) என்பவரும் மோட்டார்சைக்கிளில் சென்னையில் இருந்து வந்தவாசி அருகே தேசூரில் புதிய வீடு கட்டுவதற்காக பூமி பூஜை செய்துவிட்டு பின்னர் சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வந்தவாசி- சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் ஆராசூர் கூட்ரோடு அருகே திருவள்ளூரில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு செஞ்சி நோக்கி வந்து கொண்டிருந்த வேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் விஷ்வா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அபினேஷ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த பொன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஷ்வா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.