திருப்பரங்குன்றம் அருகே சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்த வேன் - முட்டைகள் உடைந்தன
திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் பிரிவு 4 வழிச்சாலை அருகே வந்தபோது டிரைவர் ஞானசேகர் வேனை திருப்ப முயன்றதாக தெரிகிறது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்தது. அதில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக டிரைவர் ஞானசேகரன் உயிர்தப்பினார். வேனில் இருந்த முட்டைகள் உடைந்து முட்டையின் கரு சாலையில் ஓடியது
மதுரை
திருப்பரங்குன்றம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இருந்து கப்பலூருக்கு முட்டைகள் ஏற்றிக் கொண்டு ஒரு வேன் வந்தது. அந்த வேனை அலங்காநல்லூரை சேர்ந்த ஞானசேகர் ஓட்டி வந்தார். திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் பிரிவு 4 வழிச்சாலை அருகே வந்தபோது டிரைவர் ஞானசேகர் வேனை திருப்ப முயன்றதாக தெரிகிறது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்தது. அதில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக டிரைவர் ஞானசேகரன் உயிர்தப்பினார். வேனில் இருந்த முட்டைகள் உடைந்து முட்டையின் கரு சாலையில் ஓடியது. தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் விரைந்து வந்து கிரேன் மூலம் ரோட்டில் கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்தினர். மேலும் இதுதொடர்பாக வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story