மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி, பால் பாக்கெட் விற்பனை முகவர் சாவு
மோட்டார்சைக்கிள் மீது வாகனம் மோதி பால்பாக்கெட் விற்பனை முகவர் பரிதாபமாக இறந்தார்.
புஞ்சைபுளியம்பட்டி
மோட்டார்சைக்கிள் மீது வாகனம் மோதி பால்பாக்கெட் விற்பனை முகவர் பரிதாபமாக இறந்தார்.
விபத்து
புஞ்சைபுளியம்பட்டி டானாபுதூரை சேர்ந்தவர் சம்பத் (வயது 35). இவருடைய மனைவி சுகுணா (30). சம்பத் ஒரு தனியார் நிறுவனத்தின் பால் பாக்கெட் விற்பனை முகவராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் பால் பாக்கெட் வினியோகம் செய்வதற்காக புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள கோவை ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
சாவு
இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட சம்பத் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து ஏற்பட்ட உடன் வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சம்பத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.