பள்ளிக்கு செல்ல வாகன வசதி ஏற்படுத்த வேண்டும்


பள்ளிக்கு செல்ல வாகன வசதி ஏற்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

செம்மனாரையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்ல வாகன வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம், பழங்குடியின மாணவர்கள் மனு அளித்தனர்.

நீலகிரி

ஊட்டி

செம்மனாரையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்ல வாகன வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம், பழங்குடியின மாணவர்கள் மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நீலகிரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதன்படி செம்மனாரை பழங்குடியின மக்கள், மாணவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோத்தகிரி அருகே கொணவக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட செம்மனாரை பகுதியில் இருளர் பழங்குடியின மக்கள் 160 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி உள்ளது. 5-ம் வகுப்பு படித்து முடிக்கும் மாணவர்கள் 7 கிலோ மீட்டர் பயணம் செய்து கெங்கரை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்று படிப்பை தொடர வேண்டிய நிலை உள்ளது. தற்போது 36 மாணவர்கள் செம்மனாரை கிராமத்தில் இருந்து கெங்கரை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர். ஆனால் முறையான போக்குவரத்து வசதி இல்லாததால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வாகன வசதி

தனியார் வாகனங்கள் மூலமாக குழந்தைகளை பள்ளி நிர்வாகம் சார்பில் தினந்தோறும் அழைத்து சென்று வருகின்றனர். அதற்காக ஒரு மாணவருக்கு மாதம் ரூ.600 மட்டுமே அரசு சார்பாக வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு மாதத்துக்கு ஒரு மாணவருக்கு ரூ.1,500 தனியார் வாகன உரிமையாளர்கள் கேட்கின்றனர்.

இந்த தொகையை எங்களால் வழங்க இயலாத காரணத்தினால் எங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் எங்களது குழநதைகள் கல்வி தொடர வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story