கொல்லப்பள்ளி ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம்


கொல்லப்பள்ளி ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம்
x

கொல்லப்பள்ளி ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

ராணிப்பேட்டை

கொல்லப்பள்ளி ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

பொன்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாகவும், தற்போது பனிப்பொழிவு அதிகமாக உள்ளதாலும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றன. இதையடுத்து கால்நடைத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தி பெரியம்மை தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

கொல்லப்பள்ளி ஊராட்சியில் கால்நடைத் துறை சார்பில் பெரியம்மை தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பெரியம்மை பாதித்த கால்நடைகளுக்கும் மற்றும் நோய் தாக்கம் ஏற்படாமல் தடுப்பதற்கும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டன. முகாமிற்கு கொல்லபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா சைமன் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் வினோத்குமார், கால்நடை உதவி அலுவலர் சத்தியா, ஊராட்சி செயலாளர் சிதம்பரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பெரியம்மை மற்றும் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.


Next Story