பள்ளி மாணவர்கள் கஞ்சா புகைப்பது போல வெளியான வீடியோவால் பரபரப்பு


பள்ளி மாணவர்கள் கஞ்சா புகைப்பது போல வெளியான வீடியோவால் பரபரப்பு
x

செங்கத்தில் பள்ளி மாணவர்கள் கஞ்சா புகைப்பது போல வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

செங்கம்

அரசு பள்ளி மாணவர்கள் சிலர் பள்ளி அருகே உள்ள மரத்தடியில் மறைத்து வைத்திருந்த கஞ்சாவை எடுத்து புகைப்பது போல வீடியோ செங்கம் பகுதியில் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதனால் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கம் பகுதியில் ஏற்கனவே கஞ்சா விற்பனை அதிகளவில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாணவர்கள் கஞ்சா பயன்படுத்துவது போல வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது மாணவர்கள் குறித்தும், மாணவர்கள் கஞ்சா புகைப்படம் வெளியான வீடியோ எந்த இடத்தில் நடைபெற்றது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

செங்கம் அருகே உள்ள மேல்செங்கம், அன்வராபாத், செ.நாச்சிப்பட்டு, சாத்தனூர், இறையூர், மேல்புழுதியூர், செங்கம் தளவாநாயக்கன்பேட்டை, பரமனந்தல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

போலீசார் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story