காத்திருப்பு போராட்டம்


காத்திருப்பு போராட்டம்
x

அரசு பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காத்திருப்பு போராட்டம் நடந்தது

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மருதவனம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தர வேண்டும். சமையல் கூடம் அமைத்து தர வேண்டும். கழிவறை வசதியை மேம்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் நாகராஜன் தலைமையில் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் திருத்துறைப்பூண்டி தாசில்தார் மலர்க்கொடி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story