முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
திருவாடானை தி.மு.க. தெற்கு ஒன்றியம் சார்பில் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பாக முகவர்கள் பயிற்சி பாசறை மற்றும் மீனவர் நல மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருவாடானை தி.மு.க. சார்பில் தெற்கு ஒன்றிய கழகச்செயலாளர் ஓடவயல் ராஜாராம் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டு தாரை தப்பட்டை மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருவாடானை தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஓடவயல் ராஜாராம் புத்தகம் மற்றும் சால்வை வழங்கி வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார், தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான், மதுரை ஐகோர்ட்டு கூடுதல் அரசு வக்கீல் ஒடவயல் சரவணன், திருவாடானை தி.மு.க. தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் அன்வர் சதாத், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் சீனி ராஜன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சகுபர் சாதிக், நம்புதாளை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முகைதீன், எஸ்.பி. பட்டினம் கிளைச்செயலாளர் முகமது ரபிக், ஒன்றிய பிரதிநிதி ஹிதயதுல்லா, மாவட்ட பிரதிநிதி அஸ்கர் அலி, சிறுபான்மை பிரிவு ஒன்றிய அமைப்பாளர் அசரப்அலி, மாவட்ட பிரதிநிதி அமீர்கான், தாமோதரன் பட்டினம் கிளைச்செயலாளர் தொண்டிராஜ், மாவட்ட பிரதிநிதி ஜான் கென்னடி, ஒன்றிய துணைச்செயலாளர் தூண்டி முத்து, தி.மு.க. பாக முகவர் சுல்தான் மைதீன், இளைஞரணி துணை அமைப்பாளர் அமீர், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் ரமேஷ், ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் சக்தி, மச்சூர் கிளை செயலாளர் பஷீர், ஒன்றிய சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் நாகூர் மீரான், திருவாடானை ஒன்றிய தொழிலாளர் அணி அமைப்பாளர் செந்தில் ராஜா, ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் கண்ணன், விவசாய அணி அமைப்பாளர் போஸ், ஒன்றிய வக்கீல் அணி அமைப்பாளர் ராமலிங்கம், தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் விமலா ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.