குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானை


குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானை
x

பந்தலூர் அருகே குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மழவன் சேரம்பாடியில் இருந்து காவயல் செல்லும் சாலையில் குடியிருப்பை ஒட்டி காட்டு யானை ஒன்று நடந்து சென்றது. அப்போது சாலையில் நடந்து சென்ற பொதுமக்களை யானை துரத்தியது. இதனால் அவர்கள் பீதி அடைந்தனர். நேற்று அய்யன்கொல்லி-கொளப்பள்ளி இடையே கோட்டப்பாடி விநாயகர் கோவில் அருகே ஒற்றை காட்டு யானை புகுந்து குடியிருப்புகளை முற்றுகையிட்டது. மேலும் சாலையை வழிமறித்ததால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த பிதிர்காடு உதவி வன பாதுகாவலர் கிருபாகரன், சேரம்பாடி உதவி வன பாதுகாவலர் ஷர்மிலி ஆகியோர் உத்தரவின்படி, வனவர் ஆனந்த், வனகாப்பாளர்கள் ராஜேஸ்குமார், ராமகிருஷ்ணன் மற்றும் வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், யானை அங்கேயே நின்றது. பின்னர் பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் காட்டு யானையை விரட்டினர். பகலில் யானை புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே, காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story