தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை


தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

கூடலூர்,

கடலூர் தாலுகா தேவர்சோலை அருகே மச்சிக்கொல்லி, பேபி நகர் பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை புகுந்தது. தொடர்ந்து அப்பகுதியில் இருந்த தென்னை மரங்களை சரித்து போட்டு தின்று சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதேபோல் வாழை மற்றும் பிற பயிர்களையும் நாசம் செய்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள், விவசாயிகள் கூறும்போது, முதுமலையில் இருந்து காட்டு யானைகள் அடிக்கடி வெளியேறி ஊருக்குள் வருகிறது. இதனால் வெளியில் நடமாடுவதற்கு அச்சமாக உள்ளது. மேலும் பயிர்களை சேதப்படுத்தி வருவதால் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story