வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை


வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை
x

தாண்டிக்குடி அருகே காட்டு யானை வீட்டை சேதப்படுத்தியது.

திண்டுக்கல்

தாண்டிக்குடி அருகே பெருங்கானல், அரியனூத்து உள்ளிட்ட பகுதியில் கடந்த சில தினங்களாக காட்டு யானை ஒன்று முகாமிட்டுள்ளது. அவை, அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தாண்டிக்குடியை சேர்ந்த விவசாயி சண்முகம் என்பவருக்கு சொந்தமான காபி தோட்டத்துக்குள் ஒற்றை யானை புகுந்தது. அங்கு பயிரிட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு ஆகிய பயிர்களை நாசம் செய்தன. பின்னர் அங்கிருந்த தோட்டத்து வீட்டை காட்டு யானை சூறையாடியது. இதனையடுத்து அதிகாலையில் அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

இந்தநிலையில் நேற்று காலை சண்முகம், தனது தோட்டத்துக்கு சென்றபோது வீடு மற்றும் பயிர்கள் சேதமடைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காட்டு யானையின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் மற்றும் மலைக்கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் வத்தலக்குண்டு வனவர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் பட்டாசு வெடித்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story